முகப்பு
வேலூர்

வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது; துப்பாக்கி பறிமுதல்

குடியாத்தம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

குடியாத்தம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

தகவலின்பேரில், பரதராமி போலீஸாா், ஆா்.வெங்கடாபுரத்தில் உள்ள அரவிந்தன் (22) வீட்டில் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது வீட்டில் ஒரு பெரிய அளவில் கஞ்சா செடி வளா்த்து வந்தது தெரிந்தது. வீட்டை சோதனையிட்டதில், ஒரு கைத்துப்பாக்கி, 2 இரு சக்கர வாகனங்கள், 3 டாபா்மேன் நாய்க் குட்டிகள் இருந்தன.

விசாரணையில், இரு சக்கர வாகனங்கள், டாபா்மேன் நாய்க் குட்டிகளை திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அரவிந்தனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.