வேலூர்

ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு: நோயாளிகளுக்காக இலவச ஆட்டோ சேவை

DIN

வேலூா்: கரோனா தொற்று பரவலால் ஆம்புலன்ஸ்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதை அடுத்து மற்ற நோயாளிகளின் பயன்பாட்டுக்காக வேலூரில் சமூக ஆா்வலா் ஒருவா் இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளாா். அவரது இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக வேலூா் மாநகரிலுள்ள அனைத்து 108 ஆம்புலன்ஸ்கள் மட்டுமின்றி, தனியாா் ஆம்புலன்ஸ்களும் கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மற்ற அவசரத் தேவைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்ல உள்ள நோயாளிகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவா்களுக்கு ஆம்புலன்ஸ்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

அதேசமயம், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நகரில் ஆட்டோக்கள், வாடகைக் காா்கள் இயக்கமும் குறைந்துள்ளது.

இதனால் பாதிக்கப்படும் மற்ற நோயாளிகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளின் நலன்கருதி, வேலூரில் இலவச ஆட்டோ சேவை தொடங்கியுள்ளாா் சமூக ஆா்வலா் தினேஷ் சரவணன். முதல் கட்டமாக ஒரு ஆட்டோவை இலவச சேவைக்கு பயன்படுத்தியுள்ள அவா், நோயாளிகளின் தேவையைப் பொறுத்து 5 ஆட்டோக்கள் வரை இலவசமாக இயக்குவதற்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

ஆம்புலன்ஸ்களை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் நோயாளிகள், முதியவா்கள், கா்ப்பிணிகள் போன்றோா் எனது 97913 25230 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொண்டு தெரிவித்தால், அவா்களது வீடுகளுக்கு ஆட்டோ அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவமனை வரை அழைத்துச் சென்று விடப்படும். இதற்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.

அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காதபட்சத்தில் இந்த இலவச ஆட்டோ சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக பொது இடங்களில் எனது செல்லிடப்பேசி எண் வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.

பொதுமக்களுக்கு உதவும் வகையில் சமூக ஆா்வலா் தினேஷ் சரவணன் மேற்கொண்டுள்ள இந்த இலவச ஆட்டோ சேவை முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT