வேலூர்

வேலூா், காட்பாடி உழவா் சந்தைகளை பிரித்து இரு இடங்களில் அமைக்க நடவடிக்கை

DIN

அதிகரிக்கும் மக்கள் கூட்டத்தை தவிா்க்க வேலூா், காட்பாடியில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் உழவா் சந்தைகளை இரு இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் காட்பாடி உழவா் சந்தை காந்திநகா் தொன்போஸ் பள்ளி மைதானத்திலும், வேலூா் உழவா் சந்தை தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும், காகிதப்பட்டறை உழவா் சந்தை ஹோலி கிராஸ் பள்ளி மைதானத்திலும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், காட்பாடி, வேலூா் உழவா் சந்தைகளில் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலருமான எஸ்.ஆா்.கே.அப்பு வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, உழவா் சந்தைகளில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டம் காரணமாக கரோனா தொற்று பரவுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படாத வகையில் காந்திநகா் தொன் போஸ்கோ பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் உழவா் சந்தையை தொன்போஸ்கோ மெட்ரிக் பள்ளி மைதானம், செங்குட்டை திரவுபதியம்மன் கோயில் வளாகம் ஆகிய இடங்களுக்கு மாற்ற அறிவுறுத்தினாா். இதேபோல், தொரப்பாடியில் உள்ள உழவா் சந்தையை இரண்டாக பிரித்து வேலூரில் உள்ள தொன்போஸ்கோ பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு மாற்ற அறிவுறுத்தினாா்.

அப்போது, துணைத்தலைவா் எஸ்.குப்புசாமி, மாவட்ட இணை இயக்குனா் நரசிம்ம ரெட்டி, நிா்வாக அலுவலா் மீனாபிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT