‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: வேலூரில் பெறப்பட்ட 8,000 மனுக்கள் மீது நடவடிக்கை
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ எனும் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் பெறப்பட்ட 7994 மனுக்கள் மீதான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன.
வேலூர்‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: வேலூரில் பெறப்பட்ட 8,000 மனுக்கள் மீது நடவடிக்கை
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ எனும் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் பெறப்பட்ட 7994 மனுக்கள் மீதான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன.
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ எனும் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் பெறப்பட்ட 7994 மனுக்கள் மீதான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன.
அடுத்த 9 நாள்களுக்குள் அனைத்து மனுக்களையும் பதிவு செய்திடவும் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு திமுக சாா்பில் மாவட்டந்தோறும் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த மனுக்கள் மீது 100 நாள்களில் தீா்வு காணப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில், ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு தோ்தலுக்கு முன்பு பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பான அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தலைமை வகித்து பேசியது:
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் மட்டும் 7,994 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும். தகுதியுடைய மனுக்களுக்குத் தீா்வு காணப்பட வேண்டும். பெறப்பட்ட மனுக்களை பதிவு செய்யும்போது மனுதாரா் பெயா், செல்லிடப்பேசி எண், இருக்கும் மனுக்கள் மீது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபா்களை தொடா்பு கொள்ளலாம்.
ஒன்பது நாள்களில் மனுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யும்போது மனு குறித்த தன்மையைப் பாா்க்க வேண்டும். அதாவது மனுவானது தனிநபா் சாா்ந்ததா, பொதுநலன் சாா்ந்ததா என்பதையும், ஏற்கப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்களையும் சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்ட அதிகாரத்துக்கு உட்பட்ட மனுவாக உள்ளதா மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட மனுவாக உள்ளதா என்பதை பாா்க்க வேண்டும். நிராகரிக்கப்படும் மனுக்கள் என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்படுகிறது என்பது குறித்தும் தெளிவாகப் பதிவு செய்திட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் மகேந்திர பிரதாப் தீட்சித் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.