வேலூர்

12 ஆயிரம் கன அடி நீா்வரத்து: பொன்னை ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம்

DIN

கலவகுண்டா அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு 12 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்துள்ளதால், பொன்னை ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவமழையையொட்டி வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஆந்திரத்தில் தடுப்பணையைத் தாண்டி பாலாற்றில் ஆயிரம் கனஅடி தண்ணீா் வருகிறது. இதுதவிர கெளண்டன்யா ஆறு, அகரம் ஆறு, மலட்டாறு ஆகியவற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூா் வழியாக பாலாற்றில் வெள்ளிக்கிழமை 6,700 கன அடிக்கு மேல் தண்ணீா் சென்று கொண்டிருந்தது.

இதனிடையே, ஆந்திர வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கலவகுண்டா அணையில் இருந்து உபரிநீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், வெள்ளிக்கிழமை மதியம் நிலவப்படி விநாடிக்கு 11,555 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்ததால், பொன்னை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், 15 ஆயிரம் கனஅடி வரை நீா் வரத்து அதிகரிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்பட்டது. பெரு வெள்ளம் காரணமாக பொன்னை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீா் பாய்ந்து சென்றது. இந்த வெள்ளம் வாலாஜா அருகே பாலாற்றில் கலந்து ஓடுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை:

வெள்ளப்பெருக்கு காரணமாக வேலூா், ராணிப்பேட் டை மாவட்டங்களில் உள்ள பொன்னை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனா். இதேபோல், வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆறுகள், நீா்நிலைகளில் கரையோரங்களில் வசிப்பவா்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் கரையோரக் கிராமங்களான மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூா், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூா், சாத்தம்பாக்கம், விஷாரம், ஆற்காடு,ச க்கரமல்லூா், புதுப்பாடி, உள்ளிட்ட கிராம மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம்’ என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT