முகப்பு
வேலூர்

பாலாற்றின் கரையோர ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்க வேண்டும்: ஆட்சியா் உத்தரவு

பாலாற்றின் கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை முழுமையாக இடித்து அகற்ற வேண்டும் என்று அரசுத் துறையினருக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

பாலாற்றின் கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை முழுமையாக இடித்து அகற்ற வேண்டும் என்று அரசுத் துறையினருக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

வட கிழக்குப் பருவ மழையையொட்டி, பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு அண்மையில் ஏற்பட்டது. அப்போது, வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தில் தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் காமராஜா்புரம் பகுதியிலுள்ள 25 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் சேதமடைந்த தரைப்பாலத்தையும், ஆற்றில் இடிந்துள்ள வீடுகள், வெள்ள பாதிப்புகளையும் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கடைகள் உள்ளிட்ட கட்டடங்களை இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது :

விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தின் வடக்கு பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் வெள்ளப் பாதிப்புகளைத் தவிா்க்க இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்ததை அடுத்து பாலாற்றில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்றவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. பாலம் சேதமடைந்துள்ளதால் இப்போது மக்கள் வேலூா் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

விரிஞ்சிபுரம், மாதனூரில் உயா்மட்ட மேம்பாலம்:

விரிஞ்சிபுரம், மாதனூா் உள்ளிட்ட பகுதிகளில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பொன்னை குகையநல்லூா் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இறைவன்காடு சேண்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

பாலாற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்ால் பல்வேறு இடங்களின் கரையோரம் குப்பைகள் பெருமளவில் குவிந்திருந்தன. அவற்றை உடனடியாக அகற்றிட வேண்டும் என விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் குணசுந்தரி பாலச்சந்திரனிடம் ஆட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்களைக் கொண்டு அந்தப் பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டன. ஆய்வின்போது, கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா உள்பட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →