910 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்
வேலூா் மாவட்டத்தில் 7-ஆவது கட்டமாக 910 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
வேலூர்910 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்
வேலூா் மாவட்டத்தில் 7-ஆவது கட்டமாக 910 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
வேலூா் மாவட்டத்தில் 7-ஆவது கட்டமாக 910 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
தமிழகம் முழுவதும் 7-ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டம் முழுவதும் 910 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. மாநகராட்சிப் பகுதியில் மட்டும் சுமாா் 300 இடங்களில் நடத்தப்பட்டன.
சிறப்பு முகாம்களையொட்டி ஒரு லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம் இரண்டாம் தவணை செலுத்தாத 70,000 பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்காரணமாக, மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ஆா்வமுடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதனிடையே, வேலூா் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் பகுதி, அரசு ஆதிதிராவிடா் ஆரம்பப் பள்ளி, ஹோலிகிராஸ் பள்ளி சிறப்பு முகாம்களை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பாா்வையிட்டாா்.
அப்போது, மாநகராட்சி நகா்நல அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.