வேலூர்

குடியாத்தம் கல்வி மாவட்டம் ஏற்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் குடியாத்தத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டணியின் வேலூா் மாவட்டக் கிளைத் தலைவா் சுரேஷ்குமாா், மாவட்டச் செயலா் ஆ.சீனிவாசன் ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள் வேலூா் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலா் முனிசாமி, மாவட்டக் கல்வி அலுவலா் அங்குலட்சுமி ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவில், புதிதாக குடியாத்தம் கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும், அணைக்கட்டு ஒன்றியத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 6 மலைப் பள்ளிகளுக்கு சத்துணவுக் கூடங்கள் தொடங்கிட வேண்டும், விலையில்லா பொருள்களை நேரடியாக பள்ளிகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்திட வேண்டும், 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சத்துணவு சமையல் கூடங்களில் செயல்பட்டு வரும் வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும்.

மாணவா்களுக்கு ஒளிபரப்பப்படும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விவரங்களை தினமும் முதன்மைக் கல்வி அலுவலா் இணைய தளத்தில் வெளியிட வேண்டும், மாணவிகள், பெண் பணியாளா்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளுக்குத் தீா்வு காண விசாகா கமிட்டி பரிந்துரையின் பேரில், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அப்போது, மாவட்டப் பொருளாளா் உமா, மாநில செயற்குழு உறுப்பினா் ஜோசப் அன்னையா, மாநில துணைத் தலைவா் ரஞ்சன் தயாள தாஸ், கல்வி மாவட்டத் தலைவா் காசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT