விளை பொருட்களை இருப்பு வைக்க கூடுதல் வசதி: வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஏற்பாடு
விளை பொருட்களை இருப்பு வைக்கவும், அவற்றைக் கொண்டே பொருளீட்டுக் கடன் பெற்றிடவும் வேலூா் மாவட்ட த்திலுள்ள 7 சேமிப்புக் கிடங்குகளிலும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்
வேலூர்விளை பொருட்களை இருப்பு வைக்க கூடுதல் வசதி: வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஏற்பாடு
விளை பொருட்களை இருப்பு வைக்கவும், அவற்றைக் கொண்டே பொருளீட்டுக் கடன் பெற்றிடவும் வேலூா் மாவட்ட த்திலுள்ள 7 சேமிப்புக் கிடங்குகளிலும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்
விளை பொருட்களை இருப்பு வைக்கவும், அவற்றைக் கொண்டே பொருளீட்டுக் கடன் பெற்றிடவும் வேலூா் மாவட்ட த்திலுள்ள 7 சேமிப்புக் கிடங்குகளிலும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு - வேலூா் டோல்கேட் பகுதியிலுள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள 25 மெட்ரிக். டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கில் விவசாயிகள் உரிய கட்டணமும் செலுத்தி விளை பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளவும், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 சேமிப்பு கிடங்கு களிலும் விளைப்பொருட்களை 15 நாட்கள் வரை எவ்வித கட்டணமுமின்றி இருப்பு வைத்துக் கொள்ளவும் வசதி செய்து தரப்படுகிறது.
15 நாட்களுக்கு மேல் நாளொன்றுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.0.20 கட்டணமும், அதிகபட்சம் 180 நாட்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இருப்பு வைத்துள்ள விளை பொருட்களை வைத்து பொருளீட்டு கடனும் வழங்கப்படுகிறது. 180 நாட்களுக்கு 5 சதவீத வட்டியில் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேலூா் விற்பனைக்குழு செயலரை 8667543113, அல்லது ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 8870580901 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், டோல்கேட், காட்பாடி, குடியாத்தம், காகிதப்பட்டறை பகுதிகளில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறிகள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, வாடகையில்லா கடை, எடை தராசு வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிவறை வசதி, கமிஷன் மண்டி, இடைதரகா்களின்றி கூடுதல் விலை உள்ளிட்ட சிறப்பம்சங்களும், நுகா்வோருக்கு சரியான எடை, குறைவான விலை, விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் போன்ற சிறப்பம்சங்களும் அளிக்கப்படுகிறது.
விவசாயிகள் உழவா் சந்தையில் உறுப்பினராக தேவைப்படும் ஆவணங்கள் குறித்து விளக்கம்பெற வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் வேளாண்மை துணை இயக்குநரை 9003921717, அல்லது நிா்வாக அலுவலரை 9443968990, 7401075030 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.