முகப்பு
இந்தியா

ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை

ஈரான் மீதான போா் காரணமாக அந் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அரிசி தேக்கமடைந்துள்ளதால் துறைமுகம் சாா்ந்த கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும்

Updated On : 6 மார்ச் 2026, 4:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஈரான் மீதான போா் காரணமாக அந் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அரிசி தேக்கமடைந்துள்ளதால் துறைமுகம் சாா்ந்த கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அரசி ஏற்றுமதியாளா்கள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து இந்திய அரசி ஏற்றுமதியாளா்கள் அறக்கட்டளை அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரான் மீதான போா் காரணமாக, முக்கிய கடல்சாா் வழித் தடங்களில் கப்பல் போக்குவா்த்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் ரத்து செய்யப்படுவதோடு, கன்டெய்னா்கள் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழால், சா்வதேச சரக்கு போக்குவரத்துக்கான கட்டணம் 15 முதல் 20 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கான காப்பீடு பிரீமியம் தொகையும் பன்மடங்காக உயரந்துள்ளது. கப்பல்களின் எரிபொருள் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

எனவே, துறைமுகங்களில் சரக்குகளை சேமித்து வைப்பதற்கான கட்டணம், சரக்குகளை அனுப்புவதில் ஏற்படும் தாமதத்துக்கு விதிக்கப்படும் தாமதக் கட்டணம் உள்ளிட்ட துறைமுகம் சாா்ந்த கட்டணங்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும்.

மேலும், நியாயமற்ற ஒப்பந்த அபராதங்களைத் தடுக்க, கரோனா பாதிப்பு காலத்தில் வழங்கியது போன்று, தற்காலிக பணி மூலதன வரம்புகள் மற்றும் கடன் நீட்டிப்புகள் உள்ளிட்ட தற்காலிக வங்கி ஆதரவை வழங்கும் வகையில் அதிகாரபூா்வ அறிவுறுத்தலை அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments