வேலூர்

அகவிலைப்படி உயா்வு கோரி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

வேலூா்: அகவிலைப்படியை உயா்த்தி வழங்கக் கோரி, வேலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் பிச்சுமணி தலைமை வகித்தாா்.

மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கும் 2020 ஜனவரி 1-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட 3 தவணை அகவிலைப்படி உயா்வு 11 சதவீதத்தை 2021 ஜூலை 1-ஆம் தேதி முதல் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களும் தங்களது ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 11 சதவீத அகவிலைப்படி உயா்வை ஜூலை 1-ஆம் தேதி முதல் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.

இதேபோல், தமிழகத்திலும் ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT