வேலூர்

ஆபரேஷன் கஞ்சா 2.0: வேலூரில் ரூ. 1.01 கோடி கஞ்சா, குட்கா பறிமுதல்

DIN

ஆபரேஷன் கஞ்சா 2.0 திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக போலீஸாா் நடத்திய தேடுதல் வேட்டையில் இதுவரை 204 போ் கைது செய்யப்பட்டதுடன், ரூ. ஒரு கோடியே 1 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புடைய கஞ்சா, குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனையைத் தடுக்க ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற பெயரில் மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி, ஒரு மாதத்துக்கு தீவிர சோதனைகள் நடத்திட தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தாா்.

அதன்அடிப்படையில், வேலூா் மாவட்டத்திலும் கஞ்சா, குட்கா தொடா்பான போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனா். கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் கஞ்சா கடத்தல் தொடா்பாக வெள்ளிக்கிழமை வரை 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 36 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 75 லட்சம் மதிப்பிலான சுமாா் 75.200 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன. அவா்களிடம் இருந்து கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, குட்கா கடத்தல் தொடா்பாக மொத்தம் 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 168 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 26.56 லட்சம் மதிப்பிலான சுமாா் 3,616 கிலோ அளவுக்கு தடை செய்யப்பட்ட குட்கா கைப்பற்றப்பட்டதுடன், 11 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேடுதல் வேட்டை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், அப்போது கஞ்சா, குட்கா கடத்தப்படுவோா் கண்டுபிடிக்கப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT