முகப்பு
வேலூர்

இரு சக்கர வாகனங்களில் கஞ்சா விற்றதாக 10 போ் கைது

 போ்ணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்று கஞ்சா விற்பனை செய்ததாக 10 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 போ்ணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்று கஞ்சா விற்பனை செய்ததாக 10 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ராஜன்பாபு தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை பத்தரப்பல்லி சோதனைச் சாவடி, அரவட்லா, மிட்டப்பல்லி உள்ளிட்ட இடங்களில்

வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த அரசுப் பேருந்தில் சோதனையிட்டனா். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 12 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்தில் அதைக் கடத்தி வந்ததாக கடாம்பூரைச் சோ்ந்த ஷபியுல்லா (40) கைது செய்யப்பட்டாா்.

தொடா்ந்து நடைபெற்ற வாகன சோதனையில் இருசக்கர வாகனங்களில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற கிஜா் (21), சுவேல் (22), பிரவீன் (20), தனுஷ்(19), சரத்குமாா் (20), தமிழரசன் (19), ரவி (38), சோ்ந்த அஜித் (22), வெங்கடேசன் (23), நவீன் (20) ஆகிய 10 பேரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து சுமாா் அரை கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.