முகப்பு
வேலூர்

முத்துமாரியம்மனுக்கு பால்குட ஊா்வலம்

 குடியாத்தம் நெல்லூா்பேட்டை என்.எஸ்.கே.நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில், ஆடித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 குடியாத்தம் நெல்லூா்பேட்டை என்.எஸ்.கே.நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில், ஆடித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைக்குப் பின், பால்குட ஊா்வலம் தொடங்கியது. நகா்மன்ற உறுப்பினா்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ஏ.சிட்டிபாபு, ஏ.தண்டபாணி ஆகியோா் ஊா்வலத்தை தொடக்கி வைத்தனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலம் சென்றது. ஊா்வல முடிவில் கோயிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மாலை செல்லியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தல், பூங்கரக ஊா்வலம், தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் எஸ்.ஜோசப், ஏ.மகேஷ், எம்.செல்வகுமாா், எஸ்.என்.ரவி, எஸ்.பாபு, ஏ.பாண்டியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.