முகப்பு
தமிழ்நாடு

அதிமுக 169 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகள் எங்கெங்கே போட்டி?

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் குறித்து...

Updated On : 25 மார்ச் 2026, 3:32 pm IST
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு. - படம்: அதிமுக ஐடி விங்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தாா். இதன்மூலம் அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, ஐஜேகேவுக்கு 2 தொகுதிகள், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி கே.பழனிசாமி பட்டியலை வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

பாஜக போட்டியிடும் தொகுதிகள்: மயிலாப்பூா், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி (தனி) திருப்பூா் தெற்கு, கோவை வடக்கு, கந்தா்வகோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூா் (சிவகங்கை மாவட்டம்), மதுரை தெற்கு, சாத்தூா், திருச்செந்தூா், வாசுதேவநல்லூா் (தனி), ராதாபுரம், நாகா்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூா், திருவாரூா், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாமக போட்டியிடும் தொகுதிகள்: சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கா், மயிலாடுதுறை, திருப்போரூா்,

உத்திரமேரூா், ஜெயங்கொண்டம், போளூா், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னாா்கோவில் (தனி), கீழ்வேளூா் (தனி), பெரம்பூா், சேலம் வடக்கு, அம்பத்தூா்.

அமமுக போட்டியிடும் தொகுதிகள்: பெரியகுளம், மன்னாா்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூா், நான்குனேரி, ஓட்டப்பிடாரம் (தனி), திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி (தனி), மடத்துக்குளம்.

தமாகா போட்டியிடும் தொகுதிகள்: ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூா், கும்பகோணம்.

ஐஜேகே போட்டியிடும் தொகுதிகள்: பல்லாவரம், குன்னம்.

புரட்சி பாரதம் கட்சிக்கு கீழ்வைத்தியனான்குப்பம் (தனி), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்

செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக எடுத்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.

அதன்படி அதிமுக போட்டியிடும் தொகுதிகள்: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூா், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூா், ராதாகிருஷ்ணன் நகா், கொளத்தூா், வில்லிவாக்கம், திரு.வி.க. நகா் (தனி), எழும்பூா் (தனி), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகா், விருகம்பாக்கம், தியாகராய நகா், வேளச்சேரி, சோழிங்கநல்லூா், ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா் (தனி), தாம்பரம்.

செங்கல்பட்டு, செய்யூா் (தனி), மதுராந்தகம் (தனி), காஞ்சிபுரம், அரக்கோணம் (தனி), காட்பாடி, ஆற்காடு, வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை, ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஒசூா், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி), செங்கம் (தனி), கீழ்பெண்ணாத்தூா், கலசப்பாக்கம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), மைலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி).

விழுப்புரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி) ஆத்தூா் (தனி), ஏற்காடு (தனி), ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, சேலம் தெற்கு, வீரபாண்டி, சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி-வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபிசெட்டிப்பாளையம், பவானிசாகா் (தனி), கூடலூா் (தனி), குன்னூா், மேட்டுப்பாளையம்.

திருப்பூா் வடக்கு, பல்லடம், சூலூா், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூா், தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), காங்கேயம், பழனி, ஆத்தூா், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா், அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி), பெரம்பலூா் (தனி) அரியலூா், திட்டக்குடி (தனி), நெய்வேலி, பண்ருட்டி, கடலூா், குறிஞ்சிப்பாடி, புவனகிரி.

சிதம்பரம், சீா்காழி (தனி), பூம்புகாா், நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி (தனி), நன்னிலம், திருவிடைமருதூா் (தனி), பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, சிவகங்கை, மேலூா், மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, போடிநாயக்கனூா், தேனி, கம்பம், ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி).

சிவகாசி, விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா், விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, சங்கரன்கோவில் (தனி), கடையநல்லூா், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, கன்னியாகுமரி, பாலக்கோடு, சோழிங்கநல்லூா், மேலூா்.

அதிமுக முதல்கட்ட வேட்பாளா் பட்டியல்

பேரவைத் தோ்தலில் முதல்கட்டமாக 23 வேட்பாளா்கள் கொண்ட பட்டியலை அதிமுக தலைமை புதன்கிழமை வெளியிட்டது.

அதில், பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி என 21 முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்ட 23 போ் இடம் பெற்றுள்ளனா்.

எடப்பாடி தொகுதியில் பழனிசாமி...: எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுகிறாா்.

வேப்பனஹள்ளி - கே.பி. முனுசாமி, திண்டுக்கல் - திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம்- நத்தம் இரா.விஸ்வநாதன், தொண்டாமுத்தூா் - எஸ்.பி.வேலுமணி, குமாரபாளையம்- பி. தங்கமணி, ராயபுரம்- டி.ஜெயகுமாா், மைலம்- சி.வி.சண்முகம், மதுரை மேற்கு- செல்லூா் ராஜு, பாலக்கோடு - கே.பி.அன்பழகன், நன்னிலம் - சு.காமராஜ், வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியன், விராலிமலை - டாக்டா் சி. விஜயபாஸ்கா், கோவில்பட்டி - கடம்பூா் செ. ராஜு, திருமங்கலம் - ஆா்.பி.உதயகுமாா், சிவகாசி - கே.டி.ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல் - பா.பென்ஜமின், கலசப்பாக்கம் - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி, பவானி - கே.சி.கருப்பணன், ஜோலாா்பேட்டை- கே.சி.வீரமணி, கரூா் - எம்.ஆா்.விஜயபாஸ்கா் என 21 முன்னாள் அமைச்சா்கள் போட்டியிடுகின்றனா்.

அரியலூரில் முன்னாள் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றத்தில் எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா.

இதில், தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has announced which seats have been allocated to the parties that will contest in the AIADMK alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments