FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதிமுகவை லெட்டர் பேட் கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றி வருகிறார்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அளித்த பேட்டி பற்றி...

9 அக்டோபர் 2026, 6:23 pm IST
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுகவை லெட்டர் பேட் கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றி வருவதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்:

"தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மதுராந்தகம் தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். இந்த வெற்றி, முதல்வர் விஜய்யின் 4 மாத கால சிறப்பான நல்லாட்சிக்கும், தமிழக மக்கள் விரும்பிய மாற்றத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

Advertisement

Advertisement

எவ்வித பண பலமும் இன்றி, நேர்மையான முறையில் தேர்தலைச் சந்தித்து இந்த வெற்றியைத் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் சுயநல அரசியல் காரணமாகவே அதிமுக இன்று 3-வது மற்றும் 4-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு வீழ்ச்சியடைந்துள்ளது. அதிமுகவின் கோட்டையாக இருந்த தாராபுரத்தில் கூட இரட்டை இலைச் சின்னத்தின் பாரம்பரிய வாக்குகள் சரிந்துள்ளன. அதிமுகவை ஒரு 'லெட்டர் பேட்' கட்சியைப் போல எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பிடிக்காமலும், திமுகவுடனான அவரது ரகசிய உறவு காரணமாகவும்தான் அக்கட்சியின் பல முக்கிய தலைவர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் விலகி வருகின்றனர்.

அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முதல்வர் விஜய் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். விரைவில் அதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும். நீதிமன்ற வழக்குகள் முடிந்தவுடன் காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரக்கூடும். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் ஆதரவளிப்பார்கள்" என்றார்.

summary

Minister C.T.R. Nirmal Kumar has criticized that Edappadi K. Palaniswami is turning AIADMK into a letterhead party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments