முகப்பு

ஜாக்பாட் அடிக்க முயற்சித்து தோற்றவர் இபிஎஸ்: செங்கோட்டையன்

திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்ததாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறித்து...

30 வினாடிகள் முன்பு
ஜாக்பாட் அடிக்க முயற்சித்து தோற்றவர் இபிஎஸ்: செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன் - கோப்புப் படம்
பகிர்:

திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்து, தோல்வியுற்றதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "ஞானத்தை எதிர்த்துப் போரிட முடியும். ஆனால், காலத்தை எதிர்த்துப் போரிட முடியாது. காலம் வைக்கிற புள்ளியை அழிக்க முடியாது.

எந்தவொரு தலைமையில் மன்னிக்கும் தன்மையும் பெருந்தன்மையும் இல்லையோ, அந்தத் தலைமை நீடித்த மற்றும் நிலைத்த வரலாறு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கும் அந்த வரலாறு ஏற்படவுள்ளது.

Advertisement

Advertisement

ஜாக்பாட் அடித்துத்தான் தவெக அரசு அமைந்ததாகச் சொல்கின்றனர். ஜாக்பாட் அடித்தது யார், அதில் தோல்வியுற்றது யார் என நாடே அறியும்.

திமுகவுடன் சேர்ந்து ஆட்சியை அமைக்கலாம் என ஜாக்பாட் அடித்ததே அவர்தான் (இபிஎஸ்). ஆட்சிக்கு வர வேண்டும் என பல்வேறு நிலைகளில் அவர் துடித்துக் கொண்டிருக்கிறார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த இயக்கம், இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என்றுதான் மக்கள் கேட்கின்றனர்.

ஒவ்வொருவரையும் நீக்கும் அதிகாரம் அவருக்கு இருப்பதாகச் சொல்கிறார். ஆனால், எல்லோராலும் உருவாக்கப்பட்ட பொதுச் செயலாளர்தான் அவர் என்பதை மறந்து பேசுகிறார்.

2 கோடி தொண்டர்களில் ஒருவர்தான் எஸ்.பி. வேலுமணி என்று கூறுகிறார். ஆனால், பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் ஆவதற்கு எஸ்.பி. வேலுமணிதான் உறுதுணையாக இருந்தார் என்பதை எடப்பாடி பழனிசாமி மறந்து பேசுகிறார். அவருக்குக் காலம் பதில் சொல்லும்" என்று தெரிவித்தார்.

summary

ADMK Secretary Edappadi Palaniswami tried to hit the jackpot but failed, says Minister Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.