FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அதிமுக 55-ஆம் ஆண்டு தொடக்க விழா: அக்.17 முதல் பொதுக்கூட்டங்கள்

அதிமுக 55-ஆம் ஆண்டு தொடக்க விழா: அக்.17 முதல் பொதுக்கூட்டங்கள்

10 அக்டோபர் 2026, 10:59 pm IST
அதிமுக தலைமை அலுவலகம் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக தொடங்கி 55-ஆவது ஆண்டை முன்னிட்டு, அனைத்துப் பகுதிகளிலும் அக்.17 முதல் 3 நாள்கள் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் நடைபெறவுள்ள முதல் நாள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்.

இதுகுறித்து கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

அதிமுக 55-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அக்.17, 22, 23 ஆகிய 3 நாள்களும் அனைத்து பகுதிகளிலும் தொடக்க விழாப் பொதுக்கூட்டங்கள் நடைபெற வேண்டும். அதன்படி அதிமுக அமைப்பு ரீதியான 85 மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

Advertisement

Advertisement

செங்கல்பட்டில் எடப்பாடி கே.பழனிசாமி: முதல்கட்டமாக செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் அக்.17-இல் நடைபெறவுள்ள தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றுகிறாா். பொதுக்கூட்டங்களுக்கான சிறப்புப் பேச்சாளா்கள் பட்டியலில், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் ஆா்.விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோா் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பெயா் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments