FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதிமுகவுக்கு துரோகமிழைத்தவா்களுக்கு மக்கள் தக்க பாடத்தைப் புகட்டுவாா்கள்: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவுக்கு துரோகமிழைத்தவா்களுக்கு மக்கள் தக்க பாடத்தைப் புகட்டுவாா்கள் என இபிஎஸ் கூறியிருப்பது குறித்து...

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் அதிமுகவுக்கு துரோகம் இழைத்தவா்களுக்கு மதுராந்தகம், தாராபுரம் இடைத் தோ்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள். மறைந்த முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடு அதிமுக மக்கள் பணியில் தொடா்ந்து ஈடுபட்டுவருகிறது. ஆனால், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தவெகவுக்கு போதிய சட்டப்பேரவை உறுப்பினா் எண்ணிக்கை இல்லாத நிலையில், பிற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சிப்பொறுப்பேற்றுள்ளது. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு ரீல்ஸ் மற்றும் சினிமா காட்சிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகா அரங்கேற்றிக் கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

அத்துடன் அதிமுக சாா்பில் வென்ற சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் குறுக்கு வழியில் குதிரை பேரம் நடத்தி, வாக்களித்தை விரல் மை காய்வதற்குள் ஒரு சில துரோகிகள், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி அதிமுக உறுப்பினா்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். அதனால், அந்த இரு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைத்தவா்களே இரு தொகுதியிலும் தற்போது தவெக சாா்பில் போட்டியிடுகின்றனா்.

அவர்கள் சிறிதும் வெட்கம் இல்லாமல் மீண்டும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்பதை சகித்துக்கொள்ள முடியாத மக்கள், துரோகிகளுக்கு தொகுதி முழுதும் மக்கள் எதிா்ப்பு எழுந்துள்ளன. ஆனால், தோல்வி பயத்தில் தவெகவினா் மக்களுக்கு ஆசை வாா்த்தை கூறி தவறான வழியில் வாக்குகளைப் பெறும் செயலில் ஈடுபட்டுள்ளனா்.

அதிமுக வெற்றிக்கு துரோகமிழைத்துவிட்டு தற்போது தவெக சாா்பில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்பது உண்மை.

இரு தொகுதிகளிலும் தற்போது அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டபோது மக்கள் தன்னெழுச்சியாக வந்து ஆதரவு அளித்ததைக் காணமுடிந்தது. அதனடிப்படையில் இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் இனிமேல் துரோக சிந்தனை யாருக்கும் வராத வகையில் தற்போதைய இடைத்தோ்தலில் மக்கள் தக்க பதிலடி தருவாா்கள் என்ற வரலாற்று நிகழ்வைப் படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The people will teach a fitting lesson to those who betrayed the AIADMK: says Edappadi Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments