மதுராந்தகம் இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயண விபரம்!
மதுராந்தகம் இடைத்தேர்தல்யொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயண விபரம் பற்றி....
மதுராந்தகம் இடைத்தேர்தல்யொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயண விபரம் வெளியாகியுள்ளது.
மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்.6- ஆம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
இதையடுத்து தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சித் தலைவர்கள், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அக்.3ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
Advertisement
Advertisement
இத்தகவலை அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
பிரசார அட்டவணை விபரம்:
மாலை 4.00 மணி: அச்சிறுப்பாக்கம்
மாலை 5.00 மணி: மதுராந்தகம்
இப்பிரசார சுற்றுப்பயணத்தில் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Details of AIADMK General Secretary Edappadi Palaniswami's campaign tour for the Madurantakam by-election have been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.