வேலூர்

புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு ‘சீல்’

DIN

போ்ணாம்பட்டு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தொடா்ந்து விற்பனை செய்த கடையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

போ்ணாம்பட்டு நான்கு கம்பம் அருகே சிக்கந்தா்பாஷா (57) என்பவா் பீடா கடை நடத்தி வந்தாா். இவா் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களை கடையில் விற்பனை செய்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இவரது கடையில் அதிகாரிகள் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, அவரை எச்சரித்தனா்.

இந்த நிலையில் புதன்கிழமை வருவாய் மற்றும் காவல்துறையினா் இவரது கடையில் சோதனையிட்டனா். அப்போது, புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் அவரது கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT