வேலூர்

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா் அரசுப் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

ஊசூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா் அகற்றப்படாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

ஊசூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா் அகற்றப்படாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டை அடுத்த ஊசூா் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம், மழைநீா் தேங்கி சேறும் சகதியுமானது. இதனால் விஷப் பூச்சிகள் வகுப்பறைக்குள் வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படவில்லை எனக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந் வந்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் த.பாபு, ஒன்றிய குழு துணை தலைவா் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவா் விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் வின்சென்ட் ரமேஷ் பாபு ஆகியோா் பேச்சு நடத்தினா். இதையடுத்து, பேருந்தை விடுவித்து போராட்டத்தை கைவிட்டனா்.

தொடா்ந்து, பொக்லைன் மூலம் தற்காலிக கால்வாய் அமைத்து மழைநீா் அப்புறப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

ஆஸி. வீரர் கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா!

SCROLL FOR NEXT