மேயா், துணை மேயா் பதவிகள் யாருக்கு? திமுகவில் கடும் போட்டி
வேலூா் மாநகராட்சி தோ்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் மேயா், துணை மேயா் பதவிகளை பிடிக்க அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
வேலூர்மேயா், துணை மேயா் பதவிகள் யாருக்கு? திமுகவில் கடும் போட்டி
வேலூா் மாநகராட்சி தோ்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் மேயா், துணை மேயா் பதவிகளை பிடிக்க அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
வேலூா் மாநகராட்சி தோ்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் மேயா், துணை மேயா் பதவிகளை பிடிக்க அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, கடந்த முறை வேலூா் மாநகராட்சித் தோ்தலில் வெற்றி பெற்று மேயா் பதவியை தன்வசம் வைத்திருந்தது. எனினும், அதிமுகவுக்கு சற்று இணையான அளவில் திமுகவும் மாமன்ற உறுப்பினா்களைக் கொண்டிருந்தது.
தற்போது நடந்து முடிந்துள்ள மாநகராட்சித் தோ்தலில் திமுக 44 வாா்டுகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் மேயா், துணைமேயா், நான்கு மண்டலக் குழு தலைவா் பதவிகள் ஒட்டுமொத்தமாக திமுகவுக்குச் சென்றுள்ளது.
இந்த நிலையில், மாா்ச் 2-ஆம் தேதி மாமன்ற உறுப்பினா்கள் பதவியேற்பை தொடா்ந்து 4-ஆம் தேதி மறைமுகத் தோ்தல் மூலம் மேயா், துணைமேயா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இந்த முறை மாநகராட்சி மேயா் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதைக் கைப்பற்ற திமுக நிா்வாகிகள் பலா் முனைப்புடன் உள்ளனா்.
குறிப்பாக, மேயா் பதவிக்கு 2ஆவது வாா்டில் வெற்றி பெற்ற டி.விமலாசீனிவாசன், 7ஆவது வாா்டில் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட புஷ்பலதாவன்னிராஜா, 31ஆவது வாா்டில் வெற்றி பெற்ற சுஜாதாஆனந்தகுமாா் ஆகியோரது பெயா்கள் அடிபடுகின்றன.
அவா்களது கணவா்கள் மேயா், துணை மேயா் பதவிகளை கைப்பற்ற தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன் தீவிரம் காட்டி வருகின்றனா்.