FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 4 மார்ச் 2026, 8:13 am IST
அலி அயத்துல்லா கமேனி - மோஜ்தபா கமேனி.
பகிர்:

மறைந்த அலி அயத்துல்லா கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் இண்டெர்நேஷனல் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் சேர்த்து கடந்த சனிக்கிழமை அதிரடி தாக்குதல் நடத்தியது.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சௌதி, குவைத், துபை உள்ளிட்ட நகர்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கியது.

Advertisement

Advertisement

ஈரானின் மிகவும் பாதுகாப்பான வான்பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, அந்த நாட்டின் மிக முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக மையமான தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாஸ்டர் தெருவில் உள்ள மதகுருவின் மாளிகையில் நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனி மட்டுமின்றி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதனிடையே ஈரானின் புதிய உச்ச தலைவர் யார் என்பதில் ஏற்பட்ட குழப்பத்தில், நாட்டில் உள்ள நிபுணர்கள் சபையே புதிய உச்ச தலைவரைத் தேர்வு செய்யும். அதன்படி, ஈரான் இடைக்கால உச்ச தலைவராக அலிரேசா அராஃபி கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 5 நாள்களாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அணு ஆயுத விவகாரம் தொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால் இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், ஈரானின் புதிய உச்சத் தலைவராக மறைந்த அலி அயத்துல்லா கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா கமேனி, ஈரானின் புதிய உச்ச தலைவராக ஈரான் நிபுணர்கள் சபையால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமேனியின் நீண்டகால வாரிசாக கருதப்பட்ட மோஜ்தபா (56), ஈரானின் முழுக் கட்டுப்பாட்டையும் ஏற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாரிசு அரசியலை நீண்டகாலமாக எதிர்த்து வரும் ஈரான் அரசு, தந்தைக்குப் பின்னர் மகனைத் தேர்வு செய்திருப்பது அரசின் கொள்கை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மோஜ்தபாவை ஆதரிக்க மதகுருமார்களின் குழுவை இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை கடுமையான அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

summary

Iran International reported on Tuesday that Mojtaba Khamenei, the son of late Ayatollah Ali Khamenei, has been selected as Iran’s new Supreme Leader by the country’s Assembly of Experts. "The Assembly of Experts elected Ali Khamenei’s son Mojtaba as the next Supreme Leader," Iran International reported, citing informed sources.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments