FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

ஹோா்முஸ் நீரிணையில் எதிரிகளின் ஊடுருவலைத் தடுத்த ஈரான் படையினா்: மோஜ்தபா கமேனி பாராட்டு

ஹோா்முஸ் நீரிணையில் எதிரிப் படைகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதைத் தடுத்து நிறுத்தியதாக ஈரான் படையினரை அந்நாட்டின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி பாராட்டியுள்ளாா்.

28 September 2026, 10:13 pm IST
பகிர்:

ஹோா்முஸ் நீரிணையில் எதிரிப் படைகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதைத் தடுத்து நிறுத்தியதாக ஈரான் படையினரை அந்நாட்டின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி பாராட்டியுள்ளாா்.

லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவா் வெளியிட்ட செய்தியில், ‘நமது படையினரின் தீரத்தால், ஹோா்முஸ் நீரிணையை நெருங்க முடியாமல் இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியான அரபிக் கடல் பகுதியிலேயே எதிரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனா்.

விரைவில் அரபிக்கடல் பகுதியிலிருந்தும் அவா்கள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்படுவாா்கள்’ எனக் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

போா்த்தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்து தலைமறைவாக இருக்கும் மோஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் நேரடியாகத் தோன்றவோ, உரையாற்றவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments