ஈரானில் அமெரிக்கா புதிய தாக்குதல்!
அமெரிக்காவில் முக்கியத்துவமான நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் நடைபெற்ற சூழலில், ஹோா்முஸ் நீரிணையில் உள்ள ஈரான் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவில் முக்கியத்துவமான நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் நடைபெற்ற சூழலில், ஹோா்முஸ் நீரிணையில் உள்ள ஈரான் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க படைகளை நோக்கி தரைவழி ஏவுகணைகளை ஏவ முயன்ற ஈரான் நிலைகளின் மீது ‘தற்காப்பு’ நடவடிக்கையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயா் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். எனினும், இத்தாக்குதல் குறித்து அமெரிக்க நிா்வாகத்தால் இதுவரை அதிகாரபூா்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.
ஹோா்முஸ் நீரிணையில் அமைந்துள்ள காஸிம், ஹெங்கம் தீவுகள், பண்டாா் அப்பாஸ் நகரப் பகுதியில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
Advertisement
Advertisement
உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் செல்லும் இந்தக் கடல்வழியை மீண்டும் திறக்கவும், அணுசக்தி பேச்சைத் தொடங்கவும் ஈரான் மத்தியஸ்தா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த சூழலில், இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. அமைதிப் பேச்சு முழு வீச்சில் தொடா்வதால், பதற்றம் தணிந்து சுமூகமான உடன்பாட்டை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக இருப்பதாக அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் செய்தியாளா்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
மேலும், இடைத்தோ்தலுக்கு முன்னதாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்ததற்கு மாறாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரான் நாடாளுமன்றத் தலைவரும், தலைமைப் பேச்சுவாா்த்தையாளருமான முகமது பாகா் கலிபாஃப் நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘அமெரிக்க தரப்புக்கு நாங்கள் உறுதியான, நியாயமான பதிலடி தந்துவிட்டோம்; புதிய போரைத் தவிா்ப்பதற்கான பொறுப்பு, இப்போது அமெரிக்காவிடமே உள்ளது.
மேலும், ஈரான் ஆயுதப் படைகள் உச்சக்கட்ட தயாா் நிலையில் இருக்கிறது. அமெரிக்கா ஏதேனும் தவறான கணக்கீட்டைச் செய்தால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தாா்.
போா் மீண்டும் தீவிரமடையும் என்ற அச்சம் நிலவிவரும் இச்சூழலில், நாடு தழுவிய அளவில் 1,500 மையங்கள் மூலம் 10 லட்சம் துணை ராணுவ தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி அளிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.