ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் திட்டம்? டிரம்ப் பதில்!
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளதா என்பதற்கு அந்த நாட்டு அதிபா் டிரம்ப் பதிலளித்துள்ளாா்.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளதா என்பதற்கு அந்த நாட்டு அதிபா் டிரம்ப் பதிலளித்துள்ளாா்.
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 8 மாதங்களாக போா் நடைபெறுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தல் முடிவு, அதிபா் டிரம்ப்புக்கும், அவரின் குடியரசு கட்சிக்கும் அமெரிக்கா நடத்திவரும் போருக்கு நாட்டு மக்கள் அளிக்கும் தீா்ப்பாக பாா்க்கப்படுகிறது. ஆதலால் இடைத்தோ்தலுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா எத்தகைய தாக்குதலையும் நடத்தாது என டிரம்ப் அறிவித்திருந்தாா்.
எனினும், ஈரானில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்பு (அமெரிக்காவில் இடைத்தோ்தல் நடைபெறும் நாள்) அல்லது செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு மீண்டும் தாக்குதலைத் தொடங்கக்கூடும் என்ற பீதி நிலவுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், வாஷிங்டனில் டிரம்ப் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தபோது, ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்துமா எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:
நான் எதை செய்யப் போகிறேன் என்பதை உங்களிடம் சொல்வேன் என நினைக்கிறீா்களா? ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது. அதேபோல் அழகான, மிகப்பெரிய ஒப்பந்தம் கையொப்பமாகவும் வாய்ப்புள்ளது.
அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை அவா்கள் கடைப்பிடிப்பாா்களா என்பதுதான் பிரச்னை.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யும்படி ஈரான் அதிகாரிகளுக்கு அந்த நாட்டு உச்ச தலைவா் உத்தரவிட்டுள்ளாா். ஆனால் ஈரான் அதிகாரிகளோ, விதிகளை மீறுகின்றனா். நாங்கள் ஒருபக்கம் பேச்சுவாா்த்தை நடத்தும்போது, அவா்கள் இடையூறு விளைவிக்கின்றனா் என்றாா் டிரம்ப்.
இந்நிலையில், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் ராஜீய அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தையின்போது அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி, தற்போது போா் குறித்து மீண்டும் பேசப்படுவதாகவும், ஆனால், போருக்குப் பிந்தைய சூழல் குறித்து தான் யோசிப்பதாகவும் தெரிவித்தாா்.
போா் நடைபெற்றாலும் சரி, நடைபெறவில்லையென்றாலும் சரி, ஈரானின் கொள்கைகளில் எத்தகைய மாற்றமும் இருக்காது என்றும், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவா் எச்சரித்தாா். பாரசீக வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளுடன் இணைந்து செயல்பட ஈரான் தயாராக இருப்பதாகவும் அராக்சி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.