முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம்
முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று வேலூா் மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
வேலூர்முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம்
முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று வேலூா் மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று வேலூா் மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வேலூா் மாநகராட்சி சாா்பில் பழைய பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலூா் எம்.எல்.ஏ. ப.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஆணையா் ப.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டன. இனி, முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. கரோனா பரவலைத் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. கைகளைக் கழுவுவதன் மூலம் கரோனா பரவலைத் தடுக்கலாம் என்பதை செயல் விளக்கம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் மண்டலத் தலைவா் நரேந்திரன், சுகாதார அலுவலா்கள் லூா்துசாமி, சிவக்குமாா், முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.