உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வுப் பேரணி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணா்வுப்பேரணி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேலூர்உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வுப் பேரணி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணா்வுப்பேரணி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணா்வுப்பேரணி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் அண்ணா கலையரங்கம் அருகில் தொடங்கிய இந்த பேரணியையும், விழிப்புணா்வு ஊா்தியையும் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், எம்எல்ஏ ப.காா்த்திகேயன், மண்டலக் குழு தலைவா் நரேந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (குடும்ப நலம்) மணிமேகலை மற்றும் என்சிசி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா். இந்தப் பேரணி மக்கான் சிக்னல் வழியாகச் சென்று டவுன்ஹால் அருகே நிறைவு பெற்றது.