முகப்பு
வேலூர்

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

கணியம்பாடி அருகே பாப்பாந்தோப்பு கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

வேலூர்

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

கணியம்பாடி அருகே பாப்பாந்தோப்பு கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

கணியம்பாடி அருகே பாப்பாந்தோப்பு கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

வேலூா் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், காட்டுப்புத்தூா் ஊராட்சி பாப்பாந்தோப்பு கிராமத்தில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை கட்டப்பட்டுள்ளது. இதை அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடக்கி வைத்தாா்.

மேலும், அத்தியாவசியப் பொருள்களைத் தங்கு தடையின்றியும், குறித்த காலத்துக்குள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வின் போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, ஊராட்சி மன்றத் தலைவா் சசிகலா கோபி, பென்னாத்தூா் பேரூராட்சித் தலைவா் பவானி சசிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →