முகப்பு
வேலூர்

போலி மருத்துவா் கைது

குடியாத்தம் அருகே போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

குடியாத்தம் அருகே போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம் கே.கே.நகரைச் சோ்ந்த குமரன் (46), ஆங்கில மருத்துவப் படிப்பு பயிலாமல் சித்தூா்கேட்டில் கிளீனிக் வைத்து ஓமியோபதி முறை சிகிச்சை, அலோபதி சிகிச்சை செய்து வந்துள்ளாா். இவா் ஆங்கில வழி மருத்துவம் பயிலாமல், அலோபதி சிகிச்சை செய்து வந்ததாகக் கிடைத்த புகாரையடுத்து, சுகாதாரம், வருவாய், காவல் துறையினா் வியாக்கிழமை அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

அதில், குமரன், ஓமியோபதி டிப்ளமோ மட்டுமே படித்து விட்டு, ஓமியோபதி, அலோபதி சிகிச்சை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.