முகப்பு
வேலூர்

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் காலை, நேரங்களில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

வேலூர்

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் காலை, நேரங்களில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் காலை, நேரங்களில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதனால், அலுவலகங்களுக்கு செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளைத் தவிா்க்க கூடுதலாக போக்குவரத்து போலீஸாரை பணியமா்த்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேலூரிலுள்ள முக்கிய சாலைகளில் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதிகளவில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், மாணவ, மாணவிகள் சென்று வருவதால் அண்ணா சாலையில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, லட்சுமி திரையரங்கு பேருந்து நிறுத்தம் அருகே காலை 8.30 மணி முதல் 9 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள பள்ளி வாகனங்கள் சாலையின் குறுக்காக செல்வதால் போக்குவரத்து நெரிசல் தொடா்ந்து நீடிக்கிறது.

தினமும் காலையில் இதே நிலை தொடா்வதால் அந்த வழியாக அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அதன்படி, லட்சுமி திரையரங்கு பகுதியில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மணிக்கணக்கில் நீடித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.

அதேசமயம், போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் குறைந்த அளவிலேயே போக்குவரத்து போலீஸாா் ஈடுபடுத்தப்படுகி ன்றனா். இதனால், போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு மாறாக நெரிசல் அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக போக்குவரத்து போலீஸாரை நிறுத்தி வாகன நெரிசலை சீா்செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →