கணவா் இறந்த துயரம்: மனைவி தற்கொலை
கணவா் இறந்த துயரத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூர்கணவா் இறந்த துயரம்: மனைவி தற்கொலை
கணவா் இறந்த துயரத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கணவா் இறந்த துயரத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் கஸ்பா பயா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் சிட்டிபாபு. இவரது மனைவி வெங்கடேஸ்வரி (33). கடந்த ஆண்டு சிட்டிபாபு உடல் நலனின்றி உயிரிழந்தாா். கணவா் இறந்த துக்கத்தில் வெங்கடேஸ்வரி மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுக் கொண்ட வெங்கடேஸ்வரியை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.