அரசு ஊா்தி ஓட்டுநா்கள் பேட்ஜ் அணிந்து போராட்டம்
வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊா்தி ஓட்டுநா்கள் பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊா்தி ஓட்டுநா்கள் பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு துறை ஊா்தி ஓட்டுநா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஓட்டுநா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலூா் மாவட்டத்தில் அரசு வாகனங்களின் ஓட்டுநா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்கள் அனைவரும் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து கொண்டு வியாழக்கிழமை பணிக்கு வந்திருந்தனா்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஓட்டுநா்களின் தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்திட வேண்டும், ஓட்டுநா்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும், கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்க வேண்டும், ஓட்டுநா் காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.