குடியாத்தம் நகரில் புகையிலைப் பொருள்கள் தடுப்புக் குழு சோதனை
குடியாத்தம் நகரில் மாவட்ட புகையிலைப் பொருள்கள் தடுப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.
குடியாத்தம் நகரில் மாவட்ட புகையிலைப் பொருள்கள் தடுப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில், குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.விமல்குமாா் தலைமையில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பாபு, சுகாதார ஆய்வாளா்கள் பிரித்திவிராஜ், பிரகாசம், பரத், சந்திரமோகன் உள்ளிட்டோா் புகையிலைப் பொருள்கள் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பழைய, புதிய பேருந்து நிலையங்களில் புகை பிடித்துக் கொண்டிருந்த 5 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 2 கடைகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.