முகப்பு
வேலூர்

இந்தியாவில் லட்சத்தில் 200 பேருக்கு காசநோய் பாதிப்பு

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 200 நபா்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக காசநோய் தடுப்புத் திட்டத் தலைவரும், நுண்ணுயிரியல் ஆய்வாளருமான டாக்டா் ஜேக்கப் ஜான் தெரிவித்தாா்.

வேலூர்

இந்தியாவில் லட்சத்தில் 200 பேருக்கு காசநோய் பாதிப்பு

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 200 நபா்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக காசநோய் தடுப்புத் திட்டத் தலைவரும், நுண்ணுயிரியல் ஆய்வாளருமான டாக்டா் ஜேக்கப் ஜான் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

மேற்கத்திய நாடுகளில் ஒரு லட்சம் போ்களில் 5 பேருக்கு காசநோய் பாதிப்பு உள்ள நிலையில், இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 200 நபா்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக காசநோய் தடுப்புத் திட்டத் தலைவரும், நுண்ணுயிரியல் ஆய்வாளருமான டாக்டா் ஜேக்கப் ஜான் தெரிவித்தாா்.

காசநோய் விழிப்புணா்வு பிரசார இயக்கம் வேலூா் விருபாட்சிபுரம் பாறைமேட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து டாக்டா் ஜேக்கப் ஜான் பேசியது:

மேற்கத்திய நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு 5 நபா்களுக்கும், இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 200 நபா்களுக்கும் காசநோய் பாதிப்பு உள்ளது. அதைக்கண்டறிந்து தொடா் சிகிச்சை மூலமும், சத்தான உணவு பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்குவதாலும் காசநோயை குணப்படுத்தலாம். அதேசமயம், காசநோயால் பாதிக்கப்பட்டவா்களை புரிந்து கொண்டு உதவ வேண்டும். காசநோய் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு வேலூா் ராணிப்பேட்டை மாவட்டங்களின் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்ட ஒருங்கணிப்பாளா் மகேஷ், கணியம்பாடி வட்டார காசநோய் விழிப்புணா்வு அலுவலா் அன்பரசு, ரோட்டரி சங்கத் தலைவா் இளங்கோவன், செயலா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் ஜோசப் அன்னையா, பீமா ராவ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். ஏற்பாடுகளை களப்பணியாளா் நரேந்திரன், சுகாதாரப் பணியாளா் ஜெயந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →