ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது பற்றி...
ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த போரால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைக்கும்வகையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
Advertisement
Advertisement
அதுவும் அடுத்த 30 நாள்கள் மட்டும் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே கடலில் சிக்கித்தவிக்கும் எண்ணெய் விநியோகத்தை சீராக்கவும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக இந்த குறுகிய கால அனுமதி வழங்கப்படுவதாகவும் அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீதான கடுமையான வரிவிதிப்பால் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
US grants 30 day waiver to India for buying Russian oil stuck at sea amid Middle East war
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.