ஹோர்முஸ் நீரிணை: கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு 60% உயர்வு
இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு உயர்ந்தது குறித்து...

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிச் செலவு 60 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது.
இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டு, போரை நிறுத்திக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகி வருகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால், உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஹோர்முஸ் நீரிணை வழியே இந்தியா உள்பட சில நாடுகளுக்கு மட்டுமே ஈரான் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், கடந்த அக்டோபரில் மட்டும் இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிச் செலவு 60 விகிதம் வரையில் உயர்ந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு அக்டோபரில் 10 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதிச் செலவு, இந்தாண்டு அக்டோபரில் 16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.