FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹோர்முஸ் அருகே அமீரகத்தின் தேசிய எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்! 11 பேர் படுகாயம்!

ஹோர்முஸ் நீரிணை அருகே ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்து...

32 வினாடிகள் முன்பு
ஹோர்முஸ் அருகே எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் - கோப்புப் படம் | IANS
பகிர்:

ஹோர்முஸ் நீரிணையின் அருகே ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய எண்ணெய் நிறுவனக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் போரைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் செல்வதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் கப்பல்களுக்கு ஈரான் அரசு தடை விதித்துள்ளது.

Advertisement

Advertisement

இத்துடன், நீரிணையின் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே பிற நாடுகளின் சரக்குக் கப்பல்கள் அனுமதிக்கப்படும் நிலையில், மற்ற பாதைகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக அரசுக்குச் சொந்தமான அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனியின் எண்ணெய்க் கப்பல்களில் ஒன்றின் மீது நேற்று (நவ. 17) இரவு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் சிக்கிய கப்பல் தீப்பற்றி எரிந்ததால், அதன் பணியாளர்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஒருவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

சமீபகாலமாக, ஹோர்முஸ் நீரிணையின் வழியாகப் பயணிக்கும் ஏராளமான கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

attack was carried out on a vessel belonging to the United Arab Emirates' national oil company near the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.