ஹோர்முஸ் நீரிணை.. ரூ. 96 லட்சம் சம்பளம் + ரூ.50 லட்சம் ஊக்கத் தொகையுடன் கப்பலில் வேலை!
ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல்களை இயக்கும் கேப்டன்களின் சம்பளம் குறித்து...
ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய்க் கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கத் தயாராக இருப்பதாக எண்ணெய் டேங்கர் கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையையும் மூடுவதாக ஈரான் அறிவித்தது. இந்த நீரிணையின் வழியாகத்தான் உலகின் பெருமளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, உலகளவில் எண்ணெய்ப் பற்றாக்குறை ஏற்பட்டு, அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
தடையை மீறி, நீரிணை வழியாக வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்துகின்றனர். பிப்ரவரியில் தாக்குதல் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 93 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 24 மாலுமிகள் பலியாகியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, கடந்தாண்டில் இந்த நீரிணை வழியாக சரக்குகளைக் கொண்டுசெல்ல ஒரு நாளைக்கு சுமார் 20,000 முதல் 50,000 டாலர் வரையில் கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது சரக்குக் கட்டணமாக நாளொன்றுக்கு சுமார் 1.3 மில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 96,77 லட்சம்) வரையில் மாத ஊதியம் வழங்கப்படும் என எண்ணெய் டேங்கர் கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒவ்வொரு பயணத்துக்கும் ஊக்கத்தொகையாக 50,000 டாலரும் (சுமார் ரூ. 48.38 லட்சம்) வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
சாதாரணமாக (தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு வரையில்) ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு மாத ஊதியமாக சுமார் 15,000 டாலரும் (சுமார் ரூ. 14.5 லட்சம்), மாலுமிகளுக்கு 1,500 டாலருக்கு (சுமார் ரூ. 1.45 லட்சம்) குறைவாகவே வழங்கப்பட்டு வந்தது.
$100,000 salary, $50,000 bonus: Hormuz risk sends tanker captains’ pay to new highs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.