முகப்பு

ஹோர்முஸ் அருகே கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய்க் கப்பலில் பயங்கர தீ!

ஹோர்முஸ் அருகே கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய்க் கப்பலில் தீப்பற்றி எரிந்ததாக ஈரானிய படைகள் அறிவிப்பு...

ஹோர்முஸ் அருகே கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய்க் கப்பலில் பயங்கர தீ!
எண்ணெய்க் கப்பலில் தீ... - பிரதிப் படம்
பகிர்:

ஹோர்முஸ் அருகே கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய்க் கப்பலில் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் போரால், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் செல்வதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் கப்பல்களுக்கு ஈரான் அரசு தடை விதித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே வெளிநாடுகளின் சரக்குக் கப்பல்கள் அனுமதிக்கப்படும் நிலையில், மற்ற பாதைகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதி வழியாகச் செல்ல முயன்ற எண்ணெய்க் கப்பல் ஒன்று கண்ணிவெடியில் தாக்குதலில் சிக்கி தீப்பற்றி எரிந்ததாக, ஈரானிய கடற்படை இன்று (நவ. 21) அறிவித்துள்ளது.

இதில், தாக்குதலில் சிக்கிய எண்ணெய்க் கப்பல் ஈரானின் எச்சரிக்கையைப் புறக்கணித்து, ரேடார் கருவிகளை அணைத்தபடி அவ்வழியாகச் சென்றதாக, ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் சிக்கிய கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது குறித்தும், அதில் பயணித்த மாலுமிகளின் நிலை குறித்தும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

ஏற்கெனவே, ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸ் வழியாகச் செல்ல முயற்சிக்கும் கப்பல்கள் தொடர்ந்து கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி வருகின்றன. மேலும், அவ்வழியாகச் செல்லும் தங்கள் ஆதரவு நாடுகளின் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கும் எனக் கூறப்பட்டது.

கடந்த நவ.14 ஆம் தேதி மட்டும் ஹோர்முஸ் அருகே 5 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that an oil tanker caught fire after striking a mine near Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.