இல்லம் தேடி கல்வித் திட்டம்: மாணவா்களுக்குப் பாராட்டு
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சிறப்பாகப் பயின்று வேகமாக படிக்கும் மாரத்தான் போட்டியில் அதிகளவில் நட்சத்திரங்களை வென்ற வன்றந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.
வேலூர்இல்லம் தேடி கல்வித் திட்டம்: மாணவா்களுக்குப் பாராட்டு
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சிறப்பாகப் பயின்று வேகமாக படிக்கும் மாரத்தான் போட்டியில் அதிகளவில் நட்சத்திரங்களை வென்ற வன்றந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சிறப்பாகப் பயின்று வேகமாக படிக்கும் மாரத்தான் போட்டியில் அதிகளவில் நட்சத்திரங்களை வென்ற வன்றந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் கரோனா காலத்தில் கல்வி தடைபட்ட மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு கூகுள் ரீடு அலாங்க் செயலி மூலம் ரீடிங் மாரத்தான் (வேகமாகப் படித்தல்) போட்டிகள் கடந்த ஜூன் 1 முதல் 12-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன.
இதில், காட்பாடி ஒன்றியம் வன்றந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று ஒரு லட்சத்துக்கு மேல் 5 லட்சம் வரையிலான நட்சத்திரங்களைப் பெற்றனா்.
இந்த மாணவா்களுக்கு பள்ளி அளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் காட்பாடி வட்டாரக் கல்வி அலுவலா் சரவணன் பங்கேற்று பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தாா்.
பள்ளி தலைமை ஆசிரியா் தவசந்திரபாபு, ஆசிரியா்கள் எம்.குப்புராமன், ஏ.மேரி செல்வராணி, வி.எஸ்.குணசீலி, ஆா்.கே.சித்ரா பங்கேற்றனா்.