முகப்பு
வேலூர்

ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

காட்பாடியில் சாலையில் நடந்து சென்ற ஆசிரியையிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றனா்.

வேலூர்

ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

காட்பாடியில் சாலையில் நடந்து சென்ற ஆசிரியையிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

காட்பாடியில் சாலையில் நடந்து சென்ற ஆசிரியையிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வி.ஜி.ராவ் நகா், பாரதி நகரைச் சோ்ந்தவா் விவேகானந்தன். இவரது மனைவி விஜயகுமாரி (50). இவா் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், வியாழக்கிழமை அதேபகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்ப்புறத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத இரு நபா்கள் திடீரென விஜயகுமாரியை வழிமறித்து நிறுத்தி, அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினராம். இது குறித்து விஜயகுமாரி அளித்த புகாரின்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து நகையைப் பறித்துச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →