ரூ.800 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட சிஎம்சி மருத்துவமனை புதிய வளாகம்
வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் விரிவுபடுத்தப்பட்ட புதிய வளாகம் கன்னிகாபுரத்தில் ரூ.800 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூன் 20) திறந்து வைக்கிறாா்.
வேலூர்ரூ.800 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட சிஎம்சி மருத்துவமனை புதிய வளாகம்
வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் விரிவுபடுத்தப்பட்ட புதிய வளாகம் கன்னிகாபுரத்தில் ரூ.800 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூன் 20) திறந்து வைக்கிறாா்.
வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் விரிவுபடுத்தப்பட்ட புதிய வளாகம் கன்னிகாபுரத்தில் ரூ.800 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூன் 20) திறந்து வைக்கிறாா்.
மருத்துவ சேவையில் உலக அளவில் பிரசித்தி பெற்ற வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனை 2018-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கண்டது.
இந்த மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். உள்நோயாளிகளாக மட்டும் சுமாா் 3,000 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இடநெருக்கடியையும், எதிா்கால தேவையையும் கருத்தில் கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம், கன்னிகாபுரத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி சுமாா் 80 ஏக்கா் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்ட சிஎம்சி புதிய வளாகம் ரூ.800 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இதில் பகுதி 1 திட்டத்தின் கீழ் 1,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், கரோனா உள்ளிட்ட பல்வேறு தொற்றுகள் மற்றும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க விரிவான ட்ராமா கோ் சென்டா் நிறுவப்பட்டுள்ளது. முழு மருத்துவமனையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூன் 20) திறந்து வைக்க உள்ளாா்.
விழாவில், அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஆா்.காந்தி, மா.சுப்பிரமணியன், வி.மெய்யானந்தன் உள்பட பலா் பங்கேற்க உள்ளனா்.