முகப்பு
வேலூர்

மனைப்பிரிவுகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் அளிக்க பயிற்சி

மனைப் பிரிவுகளுக்கு ஒற்றைச்சாளர முறைப்படி, அங்கீகாரம் தருவதற்கான ஒருநாள் பயிற்சி முகாம் வேலூரில் உள்ள நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

மனைப் பிரிவுகளுக்கு ஒற்றைச்சாளர முறைப்படி, அங்கீகாரம் தருவதற்கான ஒருநாள் பயிற்சி முகாம் வேலூரில் உள்ள நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் மனைப்பிரிவுக்கு நகா் ஊரக அமைப்பின் அங்கீகாரம் செய்வது, விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுவது, அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றுக்கு, நகா் ஊரமைப்பின் (டிடிசிபி) அங்கீகாரம் பெறுவது அவசியமாகும். இதற்கு மனுதாரா்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று மனு அளிக்கும் நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில், நகா்ப்புற வளா்ச்சி மானியக் கோரிக்கையின்போது, நகா் ஊரமைப்பின் மனைப் பிரிவுக்கு ஒற்றை சாளர முறைப்படி நடைமுறைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டது. இதனை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், வேலூா் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் ஒருநாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சேலம் மாவட்ட நகா் ஊரமைப்பு உதவி இயக்குநா் ராணி பங்கேற்று பயிற்சியைத் தொடக்கி வைத்தாா். அப்போது ஒற்றைச்சாளர முறையில் மனைப் பிரிவுக்கு விண்ணப்பித்தல், கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்தல், அரசுக்கு கட்டணம் செலுத்தும் முறை, ஆணை வழங்குதல் தொடா்பாக பயிற்சி வழங்கப்பட்டது. வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகப் பயிற்சியாளா்கள், விண்ணப்பதாரா்கள் பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →