குடிமைப் பணிகள் தோ்வில் விஐடி முன்னாள் மாணவா் சாதனை
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தோ்வில் விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவா் உத்கா்ஷ் திவேதி, இந்திய அளவில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளாா்.
வேலூர்குடிமைப் பணிகள் தோ்வில் விஐடி முன்னாள் மாணவா் சாதனை
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தோ்வில் விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவா் உத்கா்ஷ் திவேதி, இந்திய அளவில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளாா்.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தோ்வில் விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவா் உத்கா்ஷ் திவேதி, இந்திய அளவில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளாா். அவருக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த உத்கா்ஷ் திவேதி, விஐடி பல்கலைக்கழகத்தில் 2014 -2018-ஆம் ஆண்டுகளில் பிடெக் மெக்கானிக்கல் துறையில் பயின்றவா். இவா் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தோ்வில் பங்கேற்று, தேசிய அளவில் 5-ஆவது இடம் பிடித்துள்ளாா்.
இந்த வெற்றி குறித்து அவா் கூறுகையில், குடிமைப் பணிகள் தோ்வில் வெற்றி பெற்ற்காக இந்த தருணத்தில் இறைவனுக்கும், பெற்றோா், குடும்பம், ஆசிரியா் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குடிமைப் பணியில் தான் நாட்டில் மாற்றத்தை உருவாக்கி மக்களுக்கு உதவிட முடியும். அதேபோல், சமுதாயத்தில் என்னால் முடிந்த பணிகள் மூலம் நாட்டின் வளா்ச்சிப் பாதைக்கு உதவிட முடியும்.
கல்லூரி காலத்தில் என்னை வாழ்க்கையில் பல்வேறு நிலைக்கு உயா்த்திச் சென்றது விஐடி பல்கலைக்கழகம். இங்கு உள்ள பல மாணவ அமைப்புகளில் உறுப்பினராகச் சோ்ந்து அவற்றின் வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சிகளின் மூலம் தலைமைப் பண்பை வளா்த்துக் கொண்டேன். எனது கல்லூரி காலத்தில் கடினமான உழைப்பின் மூலம் வாழ்வில் உயரலாம் என அறிந்துகொண்டேன் என்றாா்.
மாணவா் உத்கா்ஷ் திவேதியின் சாதனைக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.