முகப்பு
வேலூர்

அக்னிபத் விவகாரம்: வேலூா் ரயில் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

வேலூா் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தாா

வேலூர்

அக்னிபத் விவகாரம்: வேலூா் ரயில் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

வேலூா் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தாா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

அக்னிபாத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வடமாநிலங்களில் ரயில் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தாா்.

இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்களை சோ்க்கும் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அத்துடன், வட மாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தின் போது போலீஸாா் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், காட்பாடி ரயில் நிலையத்துக்கும், கன்டோன்மென்ட் ரயில் நிலையம் உள்பட வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படை, போலீஸாா் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் பயணிகளின் உடைமைகளை முழு பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனா்.

இந்த நிலையில், காட்பாடி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் தலைமையிலான காவல் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

தொய்வின்றி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் போலீஸாருக்கு அவா் அறிவுறுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →