முகப்பு
வேலூர்

குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

பள்ளிகொண்டா அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

பள்ளிகொண்டா அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

பள்ளிகொண்டாவை அடுத்த கொம்மளாங்குட்டை பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மனுவில் கூறியிருப்பதாவது:

பள்ளிகொண்டா பெட்ரோல் பங்க் அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வந்தது. இந்தக் கடையை இடமாற்றம் செய்து, தற்போது ஒதியத்தூா் கொம்மளாங்குட்டை பகுதியில் மங்களம்-கட்டுபுடி சாலையில் திறக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கடையை திறந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். மேலும், விவசாய விளை நிலம் உள்ளதால் விவசாயிகளும் பாதிக்கப்படுவா். இங்கு கோயில் உள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்களும் பெரும் சிரமத்துக்குள்ளாவா். எனவே, கொம்மளாங்குட்டை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை அமைக்காமல், வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்ற அதிகாரிகள் இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →