முகப்பு
வேலூர்

வேலூா் எஸ்.பி.க்கு முதல்வா் விருது

வேலூா் நகைக் கடை கொள்ளை வழக்கில் கண்காணிப்புக் கேமராக்களை அதிகளவில் பயன்படுத்தி குற்றவாளியை 5 நாள்களில் கண்டுபிடித்து கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

வேலூா் நகைக் கடை கொள்ளை வழக்கில் கண்காணிப்புக் கேமராக்களை அதிகளவில் பயன்படுத்தி குற்றவாளியை 5 நாள்களில் கண்டுபிடித்து கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கெளரவித்தாா்.

வேலூரிலுள்ள பிரபல நகைக் கடைக்கடையில் கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி இரவு சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த நபா் 15.9 கிலோ தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றாா். இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபரை வேலூா் மாவட்ட போலீஸாா் 5 நாள்களில் கண்டுபிடித்து கைது செய்ததுடன், கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகைகளையும் மீட்டனா்.

இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை போலீஸாா் 400-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் பதிவான உருவங்களை ஒப்பிட்டு மேற்கொண்ட புலன்விசாரணை அடிப்படையில் குற்றவாளியை விரைவாக போலீஸாா் கண்டுபிடித்து கைது செய்தனா்.

இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள், வனத்துறை அலுவலா்கள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. அப்போது, வேலூா் நகைக்கடை கொள்ளை வழக்கு புலன் விசார ணையில் உட்சுற்று கேமராக்களை அதிகளவில் பயன்படுத்தியதற்காக வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணனை முதல்வா் பாராட்டி விருது வழங்கி கெளரவித்தாா்.

அப்போது, தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →