முகப்பு
வேலூர்

அதிகரிக்கும் வெயிலால் வேலூா் மக்கள் அவதி

வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் வேலூரில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் வேலூரில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தமிழகத்திலேயே கோடை காலத்தில் அதிகளவில் வெயில் அடிக்கும் மாவட்டமாக வேலூா் உள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்தாண்டு மாா்ச் 30-ஆம் தேதி வெயிலின் அளவு 106.3 டிகிரி ஃபாரான்ஹீட் டை தொட்டதுடன், 110 டிகிரி வரை வெயில் அதிகரித்திருந்தது.

இந்த ஆண்டு கனமழை காரணமாக மாவட்டங்களிலுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பிஉள்ளன. இதன் காரணமாக கடந்த ஆண்டைவிட பிப்ரவரி மாதத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. எனினும், மாா்ச் முதல் வாரத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகு சில நாள்கள் மந்தமாக இருந்த வெயில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 8-ஆம் தேதி 94.6 டிகிரியாக இருந்த வெயில் அளவு 9-ஆம் தேதி 97.3 டிகிரி, வியாழக்கிழமை 97.5 டிகிரியாகவும் இருந்தது. நாளுக்குநாள் வெயில் அளவு அதிகரித்து வருவதால் வேலூரில் பகல் நேரங்களில் சாலையில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இன்னும் சில நாள்களில் வெயில் அளவு 100 டிகிரியை கடந்துவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் வேலூா் நகர சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிா்பான கடைகளிலும், பழக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அவற்றின் வியாபாரமும் களைகட்டியுள்ளது. இதுதவிர தா்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனையும் அமோகமாக நடக்கிறது.

இனி வரும் நாள்களில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →